ரஜினி ஏன் அமெரிக்கா போகிறார் தெரியுமா?

 

 

உடல் நல செக் அப்புக்காக ரஜினி அமெரிக்கா செல்கிறார் என்று நேற்று தகவல்கள் வெளியாகின.

“செக் அப் மட்டுமின்றி, ஓய்வும் எடுத்துவிட்டு ரஜினி இந்தியா திரும்புவார். காலா பட வெளியீட்டுக்குப் பிறகே அவர் இந்தியா வருவார். அப்படத்தை அமெரிக்காவில் அவர் பார்ப்பார்” என்றும் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், “செக் அப்புக்காக மட்டும் ரஜனி அமெரிக்காவுக்கு செல்லவில்லை.  “இங்கே சிஸ்டம் சரியில்லை” என்று அடிக்கடி ரஜினி சொல்லி வருகிறார். நல்ல மாற்றத்தை இங்கே கொண்டு வர வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். ஆகவே அமெரிக்க சட்டதிட்டங்கள், நடைமுறை சிக்கல்கள் குறித்து தெரிந்துகொள்ளவும்தான் இந்த முறை அமெரிக்கா செல்கிறார்” என்று அவரது ரசிகர் மன்ற வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

அதாவது அமெரிக்க சிஸ்டத்தை ஆராயப்போகிறார் ரஜினி!