பொள்ளாச்சி பெண்கள் கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா சிஎம்? கமல் ஆவேச வீடியோ….

சென்னை:

பொள்ளாச்சி இளம்பெண்கள் கதறுவது உங்களின் செவிகளுக்கு கேட்கவில்லை சிஎம் என்று மக்கள் நீதி மய்யம்தலைவர் கமல்ஹாசன்,  இளம்பெண்கள் சீரழிக்கப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட மருத்துவர்கள், குடும்ப பெண்கள் என ஏராளமான பெண்களை பேஸ்புக் மூலம் வலைவீசி  ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இது கொடூர சம்பவத்திற்கு பின்னணியாக  திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளை சேர்ந்தவர்களும்  இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதைத்தொடர்ந்து சிபிஐ விசாரணை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள  இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த  நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்  அந்த பெண் அலறிய குரலை நினைத்துப் பார்க்கும்போது மனம் பதறுகிறது, பயம், தவிப்பு கலந்த அந்த பெண்ணின் குரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. வழக்கை விசாரிக்கும் எஸ்.பி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தவறுதலாக சொல்லிவிட்டாரா? பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி?

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.பி மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அவமானதை எப்படி துடைக்கப்போறீங்க சாமி?  இன்னும் ஏன் காத்துக்கொண்டிருக் கிறீர்கள்.. அந்த பெண்களின் அலறல் சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா சிஎம்   என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை, அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் வீடியோ…

கார்ட்டூன் கேலரி