பாட்னா,

பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பீகார் மாநில அமைச்சர், பாரத் மாதா கீ ஜே என சொல்லாத பத்திரிகையாளர்களை, நீங்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என விமர்சித்தார்.

இது பீகாரில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் சமீபத்தில், பாரதியஜனதா ஆதரவுடன் நிதிஷ்குமார் தலைமையில் புதிய ஆட்சி பதவி ஏற்றது. இந்த அமைச்சரவையில்  பாரதியஜனதாவினர் சிலர்  அமைச்சர்களாக பங்குபெற்றுள்ளனர்.

பாரதியஜனதாவை சேர்ந்த வினோத்குமார் சிங் என்பவரும் மந்திரியாக உள்ளார்.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கூட்டத்தினரை பார்த்து,  கைகளை உயர்த்தி பாரத் மாதா கி ஜே என்று கூறும்படி  வற்புறுத்தினார்.

அவரது அறிவிப்பை ஒருசிலர் கருத்தில் கெள்ளாத நிலையில், செய்தியாளர்கள் சிலரும் அவரது சொல்லை புறக்கணித்தனர்.

இதைகண்ட அமைச்சர் வினோத்குமார், பாரத் மாதா கி ஜே என்று சொல்லாத பத்திரிகையாளர்களை பார்த்து, நீங்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டினார்.

அமைச்சரின் சர்ச்சையான பேச்சு பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்,  இதுகுறித்து பேசிய பீகார் மாநில பா.ஜ.க தலைவரான நித்தியானந்த் ராய்,

“பாரத் மாதா கி ஜே’ என்ற சத்தம் கோவில், சர்ச் மற்றும் ஒலிக்கும் மணிக்கு பதிலாக ஒலிக்க வேண்டும் என்றும், மசூதிகளில் ஒலிக்கும் மணி சத்தத்திற்கு பதிலாக ஒலிக்க வேண்டும்” என்றார் கூறி மேலும் சர்ச்சையை வலுப்படுத்தி உள்ளார்.

இது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்,  லல்லுபிரசாத் கட்சியான ஆர்.ஜே.டி.யின் செய்தித் தொடர்பாளர்களான பாய் விரேந்தர் மற்றும் சக்தி யாதவ் ஆகியோர்,  அமைச்சர்  வினோத் சிங் மற்றும் பா.ஜ.க தலைவர் நிதயானந்த் ராய் ஆகியோரின் கருத்துக்கு  கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும்,  அவர்கள் பாரதிய ஜனதாவின்,  அவர்கள் உண்மையான நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்தியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

ஆனால், பாரதியஜனதாவின் கூட்டணி கட்சியான ஜே.டி.யு., அது பாரதிய கட்சியினரின்  வெளிப்படையான கருத்து சுதந்திரம் என்று கூறி உள்ளது.

தற்போது பீகாரில் ஹாட் டாப்பிக்காக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.