சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வார்டு மறுவரையை றைக்கு பிறகு, வாக்குச்சாவடிகள் மாறி உள்ளன. இதனால், வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடி குறித்து அறிந்துகொள்ள மாநில தேர்தல் ஆணையம், எளிய வழிமுறைகளை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக நீதிமன்றங்களின் உத்தரவுபடி உள்ளாட்சிகளின் வார்டுகளை மாற்றி வரையறை செய்ய்யப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலான வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி மாறி உள்ளது. இதை கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையம், ஆன்லைன் மூலம் உங்கள் வாக்குச்சாவடிகளை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் கீழுள்ள லிங்கை பயன்படுத்தி தற்பொழுது உள்ள உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது உட்பட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வசதியை  தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் இதை பயன்படுத்தி கொள்ளலாம்..

உங்கள் வாக்குச்சாவடி எது என தெரிந்துகொள்ள கீழே லிங்கை கிளிக் செய்யுங்கள்…

https://tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php?fbclid=IwAR0YHdigJq9gK59-1YE2_9Iflc7xZcL16jRPTS1iE5KRJYMercJSQD_LwOs