கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்

சென்னை

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பு படை மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் இதுவரை நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து குணப்படுத்தி உள்ளார்.  இந்த மருத்துவமனையில் நடந்த பல அலுவலக சந்திப்பில் கலந்துக் கொண்டு கொரோனா தடுப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் அவருக்கே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுள்ள்து.  சுமார் 15 நாட்களுக்கு முன்பு இவருக்குக் கடுமையான ஜுரம் வந்தது.  ஆனால் அடுத்த தினமே அவர் குணமடைந்தார். அவருக்குக் களைப்பு மற்றும் வறட்டு இருமல் தொடர்ந்ததால் அவர் ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்பினார்.  அவருக்கு சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சேலத்தைச் சேர்ந்தவரான ரவி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். சுமார் 10 நாட்களில் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு 75% தேறி உள்ளார். அதன்பிறகு அவருக்குச் சோதனை நடந்ததில் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்ட்டுள்ள்து.  தற்போது அவர் மீண்டும் பணிக்கு வந்துள்ளார்

ரவி இது குறித்து, “தனிமைப்படுத்தலின்போது நான் மிகவும் அவஸ்தையை உணர்ந்தேன்.  ஆயினும் தனிமைப்படுத்தல் அவசியம் என்பதால் அதைத் தொடர்ந்தேன்.  நான் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவற்றை அணிந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்.   இதற்குக் காரணம் மருத்துவர்கள் அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டியதால் இருக்கலாம்.

நீரிழிவு உள்ளவர்கள் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது மற்றும் பரிசோதனை செய்துக் கொள்வது மட்டுமின்றி இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைப்பதிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.  சரியாக மருந்துகளை எடுத்துக் கொண்டால் மிக விரைவில் கொரோனா  பாதிப்பில் இருந்து குணம் அடையலாம்.  கபசுரகுடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகள், சரியான் உணவு மற்றும் போதுமான தூக்கம் நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்

கார்ட்டூன் கேலரி