நோயாளியை கட்டிலுடன் 8 கிமீ கட்டிலுடன் தூக்கிச் சென்ற டாக்டர்!

மால்கன்கிரி, ஒடிசா

ரு கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவர் 8 கிமீ தூரம் கட்டிலில் வைத்து தூக்கிச் சென்றுள்ளார்.

ஒடிசாவில் உள்ள மால்கன்கிரி அருகில் உள்ள பாப்லுர் அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர் ஓம்கார் ஹோடா.   பக்கத்தில் உள்ள கிராமத்தில் ஒரு பெண் பிரசவ வலியால் துடிப்பதாக வந்த செய்தியை அடுத்து அவர் தனது உதவியாளருடன் அங்கு விரைந்துள்ளார்.  அங்கு அந்தப் பெண் கடுமையான ரத்தப் போக்கினால் அவதியுறுவதை அறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அறிவுறுத்தி உள்ளார்.

ஆனால் அங்கு சாலை வசதிகள் சரியாக இல்லாததால்,  கிராம வாசிகள் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மறுத்து விட்டனர்.   அதனால் அந்த மருத்துவர் தனது உதவியாளர் மற்றும் அந்தப் பெண்ணின் கணவருடன் உதவியுடன் ஒரு கட்டிலில் படுக்க வைத்து தூக்கிச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் நிகழ்ந்துள்ளது.  அந்தப் பெண்ணும் அவருடைய குழந்தையும் தற்போது உடல் நிலை தேறி வருவதாகவும் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.  மருத்துவரின் இந்த மனிதாபிமானச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.