ரோடாக், அரியானா

ரியானா மாநிலத்தில் பணி புரியும் மருத்துவர் தனது தங்கை திருமணத்துக்கு செல்ல விடுமுறை கிடைக்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

ஓன்கார் என்னும் 30 வயது இளைஞர் கர்நாடக மாநிலம் தார்வார் பகுதியை சேர்ந்தவர் ஆவார் . இவர் மருத்துவப் பட்ட படிப்பை முடித்தவர் ஆவார். தற்போது இவர் அரியானாவில் ரோடாக் நகரில் பட்டமேற்படிப்பு படித்து வருகிறார்.  அத்துடன் அவர் தாம் படித்து வரும் கல்லூரியின் மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவப் பிரிவில் பணி புரிந்து வருகிறார்.

இவரை இவரது துறை தலைவரான பெண் மருத்துவர் மிகவும் கொடுமைப்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. ஓன்கார் அதை பொறுத்துக் கொண்டு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஒன்காரின் தங்கைக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ள்து.

தங்கையின் திருமணத்தில் கலந்துக் கொள்ள விடுப்பு கோரிய ஓன்காருக்கு துறைத் தலைவி விடுப்பு அளிக்க மறுத்துள்ளார். பலமுறை கோரிக்கை விடுத்தும் அவருக்கு விடுப்பு அளிக்க மறுக்கபட்டுள்ளது. இதனல் அவர் மனமுடைந்து நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு அவருடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இது மற்ற மருத்துவர்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ஓன்கார் மரணத்துக்கு காரனமான துறைத் தலைவி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதை ஒட்டி காவல்துறையினர் அந்த பெண் மருத்துவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்துள்ளனர்.

ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனால் மருத்துவர்கள் போராட்டம் தொடர்கிறது. மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.