சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் குறித்த அப்டேட்….!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த படம் 2021 கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று தீபாவளியன்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பிக்பாஸ் அர்ச்சனாவின் மகளான ஜாரா அர்ச்சனா பதிவிட்டுள்ளார்.