சிவகார்த்திகேயன் பிறந்தநாள் பரிசாக ‘டாக்டர் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக்…!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் ‘டாக்டர்’ .

இந்தப் படத்தின் மூலம் தமிழில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், யோகி பாபு, இளவரசு, ‘கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது .

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17 அன்று காலை 11.03 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-