‘டாக்டர்’ படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிடத் திட்டம் ….!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் ‘டாக்டர்’ .

இந்தப் படத்தின் மூலம் தமிழில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், யோகி பாபு, இளவரசு, ‘கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது .

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

சென்ற வருடம் டிசம்பரில் துவங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா லாக்டவுன் காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது .

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்த நிலையில் டாக்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளிக்கு ‘மாஸ்டர்’ மற்றும் பொங்கலுக்கு ‘அண்ணாத்த’ ஆகிய படங்கள் உறுதியாகியுள்ளதால், ‘டாக்டர்’ படத்தை கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.