திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் அமர்ந்து கையை மட்டும் வெளியே நீட்டி சோதனை செய்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவுவதையொட்டி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.   கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு உயர்ந்த பட்ச பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியருக்கு மிகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அவ்வகையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கு சிறப்புக் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் கூண்டுக்குள் மருத்துவர் முழு பாதுகாப்பு உடையுடன் கையுறைகளுடன் இருப்பார்   அவர் தனது கைகளை மட்டும் வெளியே நீட்டி சோதனை செய்வார்.

மருத்துவர்கள் ஒருவருக்குச் சோதனையை முடிந்த பிறகு அடுத்தவருக்குச் சோதனை நடத்தும் முன்பு தங்கள் கையுறைகளை மாற்றிக் கொள்கின்றனர்.  இதன் மூலம் சோதனை செய்யும் மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.