Random image

அரசு மருத்துவமனையின் அவலம்: ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் மருத்துவர்கள்!

ஐதராபாத்:

ரசு  மருத்துவமனையின் தளம் சிறிது சிறிதாக பெயர்ந்து  விழும் அவலம் காரணமாக, அங்கு பணிபுரிந்து வரும் மருத்துவர்கள்  ஹெல்மெட் அணிந்து பணி செய்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், அதே மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள பிரபலமான ஒஸ்மானியா அரசு மருத்துவமனையில்தான் இந்த அவலம் நடைபெற்றுள்ளது. இந்த மருத்துவமனை பாழடைந்த கட்டடத்தில்  செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தி கீழ் மாடியில் உள்ள காங்கிரிட் தளம் சிறிது சிறிதாக  பல முறை இடிந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்தக் கட்டடம் பாதுகாப்பற்றது என்றும், இங்கிருந்து நோயாளிகள் உள்பட அனைவரையும் வேறு கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என மருத்துவர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு தெரிவித்த பின்பும், அரசு நடவடிக்கை எடுக்காமல் பழைய கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கொதிப்படைந்த மருத்துவர்கள்,  மாறுப்பட்ட சிந்தனையுடன் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்களின் இந்த நூதன போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரி உயிரை காப்பாற்றும் மருத்துவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஹெல்மெட் போட்டுக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.. ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகளின் உயிருக்கு என்ன பாதுகாப்பு என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது..