டெல்லி தெருவில் நடந்தால் ஒரு நாளைக்கு 15-20 சிகரெட் பிடித்ததற்கு சமம்!!!

காற்று மாசடைந்த டெல்லி தெருவில் ஒருவர் நடந்து சென்றால், 15 முதல் 20 சிகிரெட்டுகள் பிடித்ததற்கு சமமான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என மருத்துவகள் எச்சரித்துள்ளனர். டெல்லிவாசி மக்களின் நுரையீரல்கள் கருப்பாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

delhi

ஒவ்வொரு ஆண்டும் பனி காலம் தொடங்கியதும், காற்று மாசுபாடு டெல்லியை ஒருவழி செய்து வருகின்றது. டெல்லியின் மாசுபடிந்த காற்றிலிருந்து மக்களால் விடுபடவே முடியவில்லை. இதன் காரணமாக கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தீபாவளிக்குப் பட்டாசுகள் வெடிக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இத்தனையும் செய்த பின்னரும் கூட டெல்லியின் காற்றின் மாசு மிகவும் மோசமடைந்தே உள்ளது. வழக்கமான காற்றின் மாசை விட ஆறு மடங்கு அதிக அளவுக்கு மாசு இருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் பெரும்பாலான மக்களுக்கு மூச்சுத் திணறல், இருமல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் நவம்பர் 5ல் இருந்து டெல்லியின் காற்றுமாசு மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். காற்றின் மாசு குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “ தற்போது மாசுபட்ட காற்றில் டெல்லி தெருவில் ஒருவர் நடந்தால், அவர் ஒரு நாளைக்கு 15 முதல் 20 சிகரெட் பிடித்ததற்கு சமமான பாதிப்பு ஏற்படும்.

சுவாசப்பிரச்சனை காரணமாக பரிசோதனை செய்துக் கொள்ள வரும் மக்களை சோதிக்கையில், அவர்களது நுரையீரல் கருப்பாக இருப்பதை பார்த்து அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. 30 வருடங்களாக மருத்துவராக இருந்து வருகிறோம். இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது உள்ள மக்களின் நுரையீரல் கருப்பாகி வருவது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்துகிறது “ என அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.