மனநலம் பாதிக்கப்பட்டவர் வயிற்றில் இருந்து 122 ஆணிகள் நீக்கம்

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது அவரது வயிற்றில் இருந்த 122 ஆணிகள் நீக்கப்பட்டுள்ளன. ஒவ்வொறு ஆணியும் 10செ.மீ. நீளம் கொண்டவை. அதிர்ஷ்டவசமாக ஆணிகள் அவரது வயிற்றைக் கிழித்துவிடவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

doctors

எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகளை அவர் உட்கொள்ளாமல் இருந்திருக்கிறார். இதனால் அவர் எதையாவது விழுங்கியிருக்கலாம் என சந்தேககித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.

அதன்படி அறுவை சிகிச்சை செய்தபோது அவரது வயற்றிலிருந்து 122 ஆணிகளையும் உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் மீட்டுள்ளனர். இவற்றை அவர் இரண்டு ஆண்டுகளாக சிறிது சிறிதாக விழுங்கியிருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஒவ்வொறு ஆணியும் 10செ.மீ. நீளம் கொண்டவை. அதிர்ஷ்டவசமாக ஆணிகள் அவரது வயிற்றைக் கிழித்துவிடவில்லை. அப்படி நடந்திருந்தால் அவரைக் காப்பாற்றுவது மிகவும் கடினமாகியிருக்கும் ” என அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தாவித் தியாரே கூறியுள்ளார்.