Random image

கோரக்பூர் மருத்துவமனை : தொடரும் மருத்துவர்கள் ராஜினாமா

கோரக்பூர்

டந்த வருடம் ஆக்சிஜன் குறைபாடால் பல குழந்தைகள் மரணம் அடைந்த கோரக்பூர் பி ஆர் டி  மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

கோரக்பூரில் உள்ள பி ஆர் டி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கடந்த வருடம் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்தன.  இதற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் என கூறப்பட்டது.   அப்போது குழந்தைகளின் உயிரைக் காக்க ஆக்சிஜன் ஏற்பாடு செய்த மருத்துவக் கல்லூரி அதிகாரி கஃபீல் அகமது சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

தற்போது அந்த மருத்துவமனையின் நிலை என்ன என்பதை சில பத்திரிகையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.   அவர்கள் இந்த மருத்துவமனை குறித்து, “மருத்துவ மனையில் அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை என கூறப்பட்டது.   ஆனால் தற்போது மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளது.   இதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்வுக்குப் பின் பல மருத்துவர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தது என கூறப்படுகிறது.

மருத்துவர்கள் ராஜினாம செய்வது இன்னும் தொடர்ந்து வருகிறது.   இந்த மருத்துவக் கல்லூரி முதல்வரே மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதை ஒப்புக் கொண்டுள்ளார்.   இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 மருத்துவர் படிப்பு இடங்களும், 68 பட்டமேற்படிப்பு இடங்களும் உள்ளன.  அத்துடன் 124 மருத்துவ ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 101 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவ மனைகளிலும் உள்ள பல குறைகளை உ. பி. அரசு கண்டு கொள்வதில்லை.   நோயாளிகளுக்கு தேவையான பல வசதிகள்  இந்த மருத்துவமனையில் இல்லாததால் அவர்களின் நொயை போக்க முடிவதில்லை.   ஆனால் நோயாளிகள் மருத்துவர்களை குற்றம் சொல்கின்றனர்.    அதனால் பெரும்பாலான மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.” என தகவல் அளித்துள்ளனர்.