Random image

21ந்தேதி மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்: தமிழக அரசு ‘தடை’

சென்னை:

மிழகம் முழுவதும் வரும் 21-ம் தேதி வேலை நிறுத்தத்திற்கு மருத்துவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அந்த போராட்ட அறிவிப்புக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வரும் 21ந்தேதி  மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டருந்தது.

இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும்  உள்ள   ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வேலை செய்யும் 18 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டருந்தது.

இந்த நிலையில், மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இது மருத்துவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.