ஆர்.கே.நகர் பண பட்டுவாடா பட்டியல் கசிவு!! எடப்பாடி, அமைச்சர்களுக்கு ஓதுக்கீடு விபரம்

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தொடர்பான ஒரு ஆவணம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆவணத்தின் படி ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் வாக்களாளர்களுக்கு வழங்கப்படுவதற்கான மொத்த தொகை கணக்கிட்டு காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அதிமுக அம்மா அணி தரப்பில் இது மறுக்கப்பட்டுள்ளது. இது தவறான தகவல் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
நேற்று நடந்த வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணத்தில் யார்? யார்? எத்தனை வாக்காளர்களுக்கு பணம் வழங்க வேண்டும் என்றும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பண தொகையும் கணக்கிட்டு காட்டப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் நபராக செங்கோட்டையன் 37 பாகங்கள் 32, 830 வாக்காளர்களுக்கு , ரூ. 13.13 கோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் 38 பாகங்கள், 33, 193 ஓட்டுகள் ரூ. 13.27 கோடி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம், 27,837 ஓட்டுகள், ரூ. 11.13 கோடி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் 36 பாகங்கள், 32,092 வாக்காளர்களுக்கு ரூ.12.83 கோடி, தங்கமணிக்கு 37 பாகங்கள், 31, 683 வாக்காளர்களுக்கு, ரூ.12.67 கோடி, வேலுமணிக்கு 42 பாகங்கள், 27,291 வாக்காளர்களுக்கு ரூ.14.91 கோடி, ஜெயக்குமாருக்கு 33 பாகங்கள் 29,219 வாக்காளர்களுக்கு ரூ.11.68 கோடி என அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.