திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் விமான நிலைய கட்டுப்பாடு மற்றும் இயக்கப் பணியை அதானி நிறுவனத்துக்கு டெண்டர் மூலம் தரப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருவனந்தபுரம் உட்பட 5 விமான நிலையங்களின் கட்டுப்பாடு மற்றும் இயக்கப் பணிகள் அதானி நிறுவனத்துக்கு டெண்டர் மூலம் தரப்பட்டுள்ளது.

அதானிக்கு விமான நிலையங்களை எப்படி இயக்குவது என்று அதானிக்கு தெரியாது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியை அதானிக்கு நன்றாகத் தெரியும்.

5 விமான நிலையங்களின் பணியும் ஒரே நபருக்கு டெண்டரில் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதானி ஒரு பயணிக்கு ரூ.168-ம் கேரள அரசுத் துறை ரூ.135-ம், ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ.63-க்கும் கேட்டனர். இப்போதெல்லாம் டெண்டர் நடப்பதில்லை. நாடகம் தான் நடக்கிறது என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதற்கிடையே, இது குறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறும்போது, அதானிக்கு டெண்டரில் விமான சேவை கொடுத்ததால் பாதிப்பு ஏதும் வராது, மாறாக, அதிக விமானங்களின் போக்குவரத்து ஏற்பட்டு, விமான நிலையம் வளர்ச்சியடையும் என்றார்.