கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மிகப்பெரிய வணிக வளாகங்கள் உள்பட சாதாரண கடைகளில்கூட மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்படும் நிலையில், தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து  மது பானங்களை வாங்கிச் செல்லும்,  டாஸ்மாக் கடையை மூட மாநில அரசு மறுத்து வருகிறது… இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது…

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பள்ளிக் கல்லூரிகள் முதல், அரசுக்கு கோடிக்கணக்கில் வரி கட்டும் பிரபல நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மால்கள், பெரிய பெரிய கடைகளை மூட தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. மீறுபவர்களின் கடைகளை சீல் வைத்தும் அச்சுறுத்தி உள்ளது.

மக்கள் தினசரி வணங்கும் கோவில்களையும் மூடச்செய்து, அர்ச்சகர்கள் வயிற்றில் அடித்துள்ளது. மேலும், பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் பெரிய கடைகளை மூடி, அங்கு பணியாற்றி வரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வயிற்றையும் காயப்போட வைத்துள்ளது… ஆனால், அரசுக்கு  வருமானம்  தரும், டாஸ்மாக் கடைகளை மட்டும், மூட உத்தரவிடாமல், கடையன் கம்பிகளை அவ்வப்போது துடைவிட்டுக்கொண்டே வியாபாரத்தை நடத்துக்கள் என்று அறிவுறுத்தியது… வெட்கக்கேடான செயல்…

கொரோனா பாதிப்புக்குள்ளா  ஒருவரின் கையையோ, அவர் உபயோகப்படுத்திய பொருளையோ தொட்டாலே , தொட்டவருக்கு கொரோனா தொற்றி விடும் என்றும் எச்சரிக்கப்படும் நிலையில், தமிழகம் முழுவதும், பட்டி தொட்டி முதல் மாநகரம் வரை ஆக்கிரமித்து உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் தினசரி ஆயிரக்கணக்கானோர் மதுபானங்களை வாங்கியும், அதற்கான பணங்களையும் கொடுத்து வருகின்றனர்…

இவர்களில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலே, அந்த கடையில் சரக்கு வாங்கும் அனைவருக்கும் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது… இப்படியிருக்கையில்,  பல்வேறு சிறுகுறு நிறுவனங்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை அனைத்தும் மூட உத்தரவிட்ட தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளை மூட மறுத்து வருகிறது….

தற்போது பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள்ளதால், விடுமுறையில் தொழிலாளர்கள், தங்களில் கையில் இருக்கும் சொற்ப  பணத்தைக்கொண்டு டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கிக் அங்கேயே குடித்து உருளுகின்றனர்…

ஒவ்வொரு கடையிலும் தினசரி ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று மதுபானங்களை போட்டிப்போட்டு வாங்கிக்கொண்டு வருகின்றனர்… அதை விற்பனை செய்பவரும் எந்தவித பாதுகாப்புமின்றி, சட்டை பனியன்களை அவிழ்த்துபோட்டு விட்டு, தங்களது பாணியிலேயே விற்பனையை ஜோக நடத்தி வருகின்றனர்…

கொரோனா பரவி வரும் என மக்கள் கூடுவதற்கே தடை விதிக்கும் தமிழகஅரசு, டாஸ்மாக் கடைகளில் கூடும் மக்களை மட்டும் கண்டு கொள்ளாமல், மாற்றாந்தாய் போக்கில் நடந்துகொள்கிறது…

சட்டம் அனைவருக்கும் சமம்தானே… அப்படியிருக்கும்போது, மதுபானக் கடைகள் மட்டும் திறந்திருப்பது எந்த வகையில் நியாயம்….

தமிழகஅரசின் எதேச்சதிகார போக்கை, பொதுமக்களும் நெட்டிசன்களும் கடுமையாக சாடி வருகின்றனர்…

பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் வகையிலான நடவடிக்கைகளை பார்க்கும் நிதிமன்றங்களே பலமுறை, தானாவே முன்வந்து வழக்குகளை தொடுத்து, விசாரித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிற்து…

அதுபோல கொரோனா குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பும் நீதிமன்றங்கள், அரசின் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக எந்தவித உத்தரவை பிறப்பிக்க தயங்குவது ஏனோ..

மக்களின் உயிரோடு விளையாடும் தமிழகஅரசு மீது சாட்டையை சுழற்றாமல், நீதிதேவதைகளும் வாயை மூடி மவுனித்து விட்டதோ?