ஜெ.வுக்கு வெளிநாட்டில் சொத்து உள்ளதா? வருமான வரித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை:

ஜெயலலிதா பெயரில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவு  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குறித்து கேள்வி எழுப்பி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ஐதராபாத் திராட்சைத் தோட்டம், கொடநாடு எஸ்டேட், உட்பட ஏராளமான சொத்துக்கள் ஜெயலலிதா பெயரில் உள்ளன. போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு உட்பட ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.913 கோடி இருக்கும். இந்த சொத்துக்களை  நிர்வகிக்க ஒருவரை சென்னை உயர்நீதி மன்றம் நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது ஜெயலலிதா சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு?  அவருக்கு கடன் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும், தெரிவிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது. மேலும் போயஸ் தோட்ட ஜெயலலிதா வீடு  நினைவு இல்லமாக மாற உள்ளதால், அதுகுறித்து தமிழ்வளர்ச்சித்துறையும்  6ந்தேதிக்குள் பதிலளிக்க கூறியிருந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பில் வாதாடப்பட்டது. அதைத்தொடர்ந்து,   மேலும்,  ஜெயலலிதா பெயரில் வெளிநாட்டில் சொத்துகள் ஏதேனும் உள்ளதா  என்பது  குறித்து வருமானவரித்துறை, அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.