உச்சநீதி மன்றத்தில் ஆஜராக முடியாது – நீதிபதி கர்ணன் அதிரடி!

கொல்கத்தா,

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என நீதிபதி கர்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உயர்நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றி வரும்  சி.எஸ். கர்ணன்,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகவில்லை. அதனால் அவர்மீது பிடிவாரண்ட் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக இப்போதுதான் இதுபோன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் நீதிபதி கர்ணன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

 

அப்போது அவர், ‘‘என் மீது தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருப்பது, என்னை தொல்லை செய்வதற்குத்தான்’’ என குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம்

‘‘மார்ச் 31–ந்தேதி கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஆஜராவீர்களா?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘ ஆஜராகப் போவதில்லை’’ என உறுதிபட பதில் அளித்தார்.

அது மட்டுமின்றி, ‘‘நான் எதற்காக ஆஜராக வேண்டும்?’’ எனவும் நீதிபதி கர்ணன் கேள்வி எழுப்பினார்.

 

Leave a Reply

Your email address will not be published.