”பயங்கரவாதிகள் பற்றி தகவல் சொல்வது கிடையாது”: முஸ்லிம் சமுதாயத்தினர் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்கடன்:

“தங்கள் மதத்தைச் சேர்ந்த பயங்கரவாத நபர்களைப் பற்றி இஸ்லாமியர்கள் தகவல் சொல்வதில்லை” என்று  அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டெனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் ஓரினச்சர்க்கை கிளப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தி 49 பேர்களை கொன்றார் ஓமர் என்கிற இஸ்லாமிய இளைஞர். இது குறித்து  ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசினார் அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அப்போது அவர், “உமர் போல வெறித்தனமாக தாக்குதல்களை நடத்தக்கூடிய மனநிலை உள்ளவர்கள்  அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெறுப்புணர்வால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். உமரும் அப்படித்தான். அவன் ஏற்கெனவே வன்முறைக்கு பெயர் போனவனாக இருந்திருப்பான் என்பதே என் கணிப்பு.   ஆனால் உமர் போன்ற போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது” என்று முஸ்லிம் சமுதாயத்தின் மீது குற்றம் சாட்டினார் ட்ரம்ப்.

இது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.