சென்னை:

முரசொலியை விமர்சிக்கும் ரஜினிக்கு எமர்ஜென்சியின்போது துக்ளக் எங்கு பிரிண்டானது என தெரியுமா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் (டிசம்பர் 14ந்தேதி( சென்னையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் பொன்விழாவில் பேசிய ரஜினி, முரசொலி பத்திரிகையை மட்டம் தட்டும் விதத்தில் பேசினார்.  முரசொலி பத்திரிகையை ஒருவர் வைத்திருந்தால், அவரை திமுககாரர் என்பார்கள் என்றும்,  துக்ளக் இதழை வைத்திருந்தால் அவரை அறிவாளி என்பார்கள்” எனக் கூறி பற்ற வைத்தார்.

ரஜினியின் இந்த பேச்சு சர்ச்சைகளை எழுப்பியது.  முரசொலி குறித்த ரஜினியின் கருத்துக்கு திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் கடும் கண்னம் தெரிவித்தனர். இந்த நிலையில், 1976ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால்,  நாட்டில் அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) செய்யப்பட்டபோது, துக்ளக் வார இதழ்  முரசொலி அலுவலகத்தில்தான் அச்சிடப்பட்டது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், South vision books எடிட்டர் நீதிராஜன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், துக்ளக் இதழ் முரசொலி அலுவலகத்தில் அச்சிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில்,

தொடங்கியதில் இருந்தே துக்ளக் இதழ் ஆனந்த விகடன் அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டு வெளியானது.

சோவின் அரசியல் கருத்துகளால் பல இடர்பாடுகள் வந்தபோதிலும் எஸ்.எஸ்.வாசன் உறுதியாக இருந்து சமாளித்தார்.

அப்போதுதான் எமெர்ஜென்ஸி வந்தது. பத்திரிக்கைக்கான கச்சா பொருள் பேப்பர். அப்போது அது மொத்தமும் இறக்குமதி என்பதால் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கோட்டா முறையில் வந்தது.

இப்போது வாசனுக்கு வேறு வழியில்லை. விகடனைக் காப்பாற்ற துக்ளக்கை கைவிட வேண்டியிருந்தது.

சென்னையில் வேறு யாரும் துக்ளக்கை அச்சடிக்க முன்வரவில்லை. சோ தற்காலிகமாக பத்திரிக்கையை நிறுத்த முடிவு செய்தார். அப்போது ராம்நாத் கோயங்கா மட்டும் துணிச்சலாக உதவ முன்வந்தார்.

அச்சடிக்க துவங்கிய அதே இரவில் எக்சைஸ் ரெய்டு தொடங்க, முதல் ஃபாரமே நிறுத்தப்பட்டது.

இதைக் கேள்விப்பட்ட முதல்வர் கலைஞர் ராஜாராமை அழைத்து சோ துணிச்சல்காரன்., இந்த நேரத்துலே அவனை கஷ்டப்பட விடக்கூடாது., அவனுக்கு சம்மதம்னா, எக்ஸ்பிரஸ் எஸ்டேட்லே இருந்து அப்படியே எல்லா ஃபாரத்தையும் கொண்டு வந்து முரசொலியில் அடிச்சு கொடுத்துடுங்க என்றார்.

அதன்படியே மறுநாள் பகலிலேயே (அப்போது இரவில் மட்டும்தான் மெஷின் ஓடவேண்டும் என்பதும் கட்டுப்பாடு) அச்சடிச்சு,மறுநாள் வெளியானது.

அடுத்தத்த இதழ்களுக்கு ப்ளாக்லே பேப்பர் வாங்கி ஆங்காங்கே அச்சடிச்சார் சோ! இக்கட்டான சூழலில் முரசொலி உதவியது. அச்சடித்தற்கு பணமும் வாங்க மறுத்துட்டாங்க. தொடர்ந்து அவர்களிடமே உதவி கேட்பது முறையல்ல என்பதால் வேற ஏற்பாடுகளை செய்து கொண்டேன் என்றார் சோ.

இது வரலாறு.

=====
ரஜினிக்கு இது தெரியவும் வாய்ப்பில்லை. இதை சொல்லி கொடுக்கவும் அவர் அருகில் யாரும் இல்லை.

கலைஞர் வெறும் அரசியல்வாதி மட்டும் அல்ல. பெரியார் மற்றும் அண்ணாவின் பிம்பம்..

தினமும் அதிகாலையில் எழுந்து தமிழகத்தின் கடைக்கோடி தொண்டனுக்கு உடன்பிறப்பே! என்று தினமும் கடிதம் எழுதிய உலகத்தில் ஒரே தலைவன் கலைஞர் மட்டுமே!

வரலாறு தெரியாமல் உளறி தள்ளி கேவலமான அரசியல் செய்தால் தமிழர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை எல்லா அரசியல்வியாதிகளும் உணர வேண்டும்.

வாழ்க கலைஞர்!!

Forward msg