TrueCaller நமக்கு தெரியாமல் வங்கிக் கணக்கினை யுபிஐ உடன் இணைக்கிறதா?

நமக்கு வரும் பெயர் தெரியாத அழைப்பை அவ்வப்போது தெரிய வைத்து தேவையில்லாத அழைப்பையெல்லாம் நிராகரிக்கத்தான் நமக்கு TrueCaller பயன்படுகிறது. ஆனால் ஓணானை எடுத்து வேட்டிக்குள்  விட்ட கதையாக TrueCaller நமக்குத்தெரியாமல் நம் வங்கிக்க ணக்கினை  அவர்களின் யுபிஐ கணக்குடன் இணைக்கிறது என்பதை கண்டறிந்து பலர் கன்டன குரல்களை எழுப்பியுள்ளனர்.

உதாரணமாக யுபிஐ உடன் நமது வங்கிக்கணக்கினை இணைக்க முதலில் சம்பந்தப்பட்ட வங்கி யிடம் நமது செல்பேசியை பயன்படுத்தி யுபிஐ வாங்கியிருக்கவேண்டும். பின் எந்த செயலியில் பயன்படுத்தவேண்டும் என்றால் அந்த செயலியில் நம் பயன்படுத்தும் செல்பேசி எண்ணினைக் கொண்ட SIM இற்கு தனியாக ஒரு உறுதிபடுத்தும் செய்தி அனுப்பப்படும். அதில் இந்த வங்கி இந்த சேவை நிறுவனத்திற்கு நம் வங்கிக்கணக்கினை இணைக்கும் என்ற தகவல்களோடு விபரம் இருக்கும்

ஆனால் TrueCaller சமீபத்திய பதிப்பில் டுருகாலர் தானாகவே ஓரு மறையாக்கம் செய்யப்பட்ட செய்தியை நமது செல்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்புகிறது. அடுத்த நிமடமே ஐசிஐசிஐ வங்கி யில் இருந்து நமக்கு அவர்கள் UPI கணக்கு திறக்கப்பட்டுவிட்டதாக குறுஞ்சேதி வழியாக தெரிவிக்கிறது

இதுபற்றி டுவிட்டரில் புகார் தெரிவித்த மென்பொருள் பொறியாளர் ஒருவரின் வழியேத்தான் இந்த பிரச்னை தெரிய வந்தது. இதோ அவரின் செய்தி

““I fell victim to a @Truecaller UPI scam this morning,” wrote Dheeraj Kumar, a software engineer, on Twitter. “I woke up and checked my android phone, which auto-updated a few apps, including @Truecaller. It automatically, immediately sent an encrypted SMS from my phone to an unknown number, following which @ICICIBank sent me a sms.” 

இதுபற்றி யுபிஐ நிர்வகித்துவரும் National Payments Corporation India (NPCI) தலைவர் டுருகாலர் இரண்டு கட்ட பாதுகாப்பு இல்லாமல் கணக்கு துவக்க முயற்சி செய்துள்ளதாகவும், இது ஒரு மென்பொருள் கோளாறு சரி செய்யப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்

இது குறித்த விளக்கமளித்த TrueCaller மென்பொருள் கோளாறு சரி செய்யப்பட்டுனிட்டதாகவும்  தெரிவித்தது. இந்த பிரச்னை ஒரு கோடி பேர் இந்த மென்பொருள் கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்

தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் TrueCaller செயல்பாட்டு அனுமதியில் SMS Permission அணுகும் வசதியை நீக்கிவிடுங்கள்.

விசயம் தெரியாதவர்கள் தற்காலிகமாக உங்கள் TrueCaller செயலியை நீக்கி பின் புதிய பதிப்பினை நிறுவுங்கள்

பணி பரிவர்த்தனை எளிதாக்கப்படவேண்டுமென்றால்  தொழில்நுட்பங்களும் நம்மை ஏமாற்ற எளிதாகிவிடுகின்றன, எனவே நாம்தான் கவனத்தோடு இருக்கவேண்டும்.

செல்வமுரளி