கொலம்பியா விமான நிலையத்தில், உரிமையாளரால் தவிக்கவிட்டு கைவிடப்பட்ட நாய் சோகம் காரணமாக உணவு உண்ணாமல் மரணம் அடைந்தது.

மனதை  நெகிழ வைக்கும் இந்த சம்பவம் கொலம்பியாவில் உள்ள புகாரமங்கா விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

நன்றி உள்ள பிராணிகளில் முதன்மையானது நாய். எத்தனையோ சம்பவங்களில் தனது உரிமையாளர்களை காப்பாற்ற தனது உயிரையே கொடுத்துள்ள நிகழ்வு அவ்வப்போது அறிந்திருப்போம்.

அதுபோலவே, தான் வளர்த்து வந்த நன்றியுள்ள நாயை, விமான நிலையத்தில் தவிக்க விட்டு பறந்துவிட்டார் அதன் உரிமையாளர். இதன் காரணமாக, அந்த நாய் உரிமையாளரை தேடித் தேடி விமான நிலையத்தையே கடந்த ஒரு மாதமாக சுற்றி வந்தது. இந்நிலையில் அந்த நாய் பரிதாப இறந்தது.

கொலம்பியாவில் உள்ள புகாரமங்கா விமான நிலைய முனையத்தில் ஒரு நாய் கடந்த ஒரு மாதமாக சுற்றி வந்தது. அந்த நாயை அதன் உரிமையாளர் அனாதையாவி விட்டுச்சென்றுள்ளார். இதன் காரணமாக தனது எஜனமானரை நினைத்து ஏங்கிய நாய் உடல் நலம் குன்றியது.

நியூப் விஜிரா (“Nube Viajera” )  என்று அழைக்கப்படும் இரண்டு வயதுள்ள  அந்த நன்றியுள்ள ஜீவன் எஜமானரை எண்ணி நோயுற்றது. தனது  உரிமையாளர் திரும்பி வரும்போது அதை அழைத்துச்செல்வார் என நம்பிக்கையுடன் சுற்றி வந்தது.

அந்த நாய்க்கு விமான நிலைய ஊழியர்கள், பயணிகள் உணவு வாங்கி போட்டனர். ஆனால், அது சரிவர சாப்பிடாமல் விமான நிலையத்தின் ஒரு மூலையிலேயே படுத்து கிடந்தது. இதன் காரணமாக அதன் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. நிற்க கூட முடியாத நிலைக்கு சென்றது.

இதுகுறித்து விலங்குநல மீட்பு குழுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த நாயை மீட்டு சிகிச்சை அளித்தனர். அதற்கு நரம்பு ஊசி மூலம்  உணவு மற்றும் மருந்து கொடுக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அந்த நாய் பரிதாபமாக இறந்தது.

தனது எஜமானரை எண்ணி எண்ணி அந்த நாய் இறந்தது விமான நிலைய ஊழியர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அன்பாக வளர்த்த நாயை கல்நெஞ்சக்காரரான  அதன் உரிமையாளர் தவிக்க விட்டுச்சென்றதால், அந்த நாய் உடைந்துபோன இதயத்துடன் மரணத்தை தழுவியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.