கால்பந்து போட்டியின்போது எதிரணியினரின் கோலை தடுத்த ‘நாய்’ (வைரல் வீடியோ)

பிஷாரே:

மீபத்தில் அர்ஜெண்டினாவில் நடைபெற்ற  ஒரு கால்பந்து போட்டியில் வியக்கத்தக்க வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றது.  வீரர் அடித்த பந்து கோலுக்குள் செல்லும்போது, அந்த நேரத்தில் திடீரென வந்த நாய் ஒன்று அந்த பந்தை தட்டிவிட்டு சென்றது. இதன் காரணமாக எதிர் அணி யினரின் கோல் தடுக்கப்பட்டது.

அர்ஜென்டினாவில் சமீபத்தில்  நடைபெற்ற இரு அணிகளுக்குமிடையே மூன்றாவது பிரிவு  போட்டியின்போது ஒரு அணியின் வீரர்  ஜுவன்ட்டு யூனிடா டி குலுவாயுச்சூ அடிந்த பந்து கோலை  நெருங்கும் சமயத்தில் ஒருவரும் எதிர்பாராக்காத வகையில் ஒரு நாய் அற்புதமாக காப்பாற்றியது.

இந்த சம்பவம்  தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை கண்டு வியந்துள்ளனர்.

நாய் எதிர் அணியினரின் கோலை காப்பாற்றினால், போட்டியில் வெற்றி பெற்றது அந்த அணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவை நீங்களும் கண்டு ரசியுங்களேன்…