ன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்ட வரும் நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் மோப்ப நாய்களும், அசத்தலாக யோகா செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாங்க உங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல…. என்று கோதாவில் இறங்கிய மோப்ப நாய்களின் யோகா  வீடியோ வைரலாகி வருகிறது.

இன்று நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா செய்து சிறப்பித்து வருகிறார்கள். சாதாரண கிராமவாசி முதல், சியாச்சின் மலை உச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஜவான்கள் உள்பட  அனைத்து தரப்பினரும் யோகா செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தில்  எல்லை பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து, அவர்கள் வளர்த்து வரும் மோப்ப நாய்களும் யோகாச செய்து அசத்தி உள்ளன.

எல்லை பாதுகாப்பு படையினரின் மோப்ப நாய்கள் பிரிவு ஜவான்கள்  ஒவ்வொரு யோகாசனங் களை  செய்ய, அதே போல மோப்ப நாய்களும் யோகா சனங்கள் செய்கின்றன.  மோப்ப நாய்கள் யோகா சனங்கள் செய்வது, பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.