சிற்றுண்டியாக வைரங்களை ‘சாப்பிட்ட’ நாய்க்குட்டி..

சிற்றுண்டியாக வைரங்களை ‘சாப்பிட்ட’ நாய்க்குட்டி..
மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வைர வியாபாரி வீட்டில் ‘லேப்ரடார்’ ரக நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
வீட்டுக்குள் அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருந்த நாய்க்கு அன்று கொலைப்பசி போலும்.
இரண்டு வைரத்துண்டுகள், அதன் கண்ணில் படும் படியாக வைக்கப்பட்டிருந்தது.
‘’ஏதோ ஒரு சுவையான ‘டிஷ்’ என நினைத்து இரு வைரக் கற்களையும் விழுங்கி விட்டது.
ரொம்ப நேரம் கழித்தே நாய், வைரத்தைச் சாப்பிட்ட விஷயம், அதன் உரிமையாளருக்குத் தெரிய வந்துள்ளது.
உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்றுள்ளனர்.
டாக்டர்கள் ‘எக்ஸ்ரே’ எடுத்துப் பார்த்தபோது, நாய்க்குட்டி வைரத்தை விழுங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
ஆபரேஷன் செய்து, இரு வைரங்களையும் நாயின் வயிற்றில் இருந்து எடுத்தனர், டாக்டர்கள்.
சிற்றுண்டியாக நாய்க்குட்டி ’சாப்பிட்ட’ இரு வைரத்துண்டுகளின் மதிப்பு என்ன தெரியுமா?
ஒன்றரை லட்சம் ரூபாய்.
-பா.பாரதி.