பறவை மோதியதால் தோகா புறப்பட்ட விமானம் தரையிறக்கம்!

சென்னை,

சென்னையில் இருந்து தோகா புறப்பட்ட விமானம் பறவை மோதியதால் உடடினயாக தரையிறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து இன்று காலை கத்தார் நாட்டின்  தோகாவுக்கு இன்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 134 பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தின்மீது பறவை மோதியது. இதையடுத்து, விமான உடடினயாக விமானத்தை மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே தரை இறக்கினார்.

இதனையடுத்து பயணிகள் மாற்று இண்டிகோ விமானம் மூலம் 2 மணி நேரம் தாமதமாக அனுப்பி வைக்கப்பட்டனர். விமானம் தரையிறங்கியதால் மும்பை, டெல்லி செல்லும் விமானங்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது