Random image

கச்சா எண்ணெய் விலை உயர்வால் டாலர் மதிப்பு ரூ.70 ஆகலாம் : ஆய்வறிக்கை

டில்லி

ண்ணெய் விலை உயர்வு மற்றும் விளைபொருள் ஆதார விலை உயர்வு ஆகியவைகளால் டாலர் மதிப்பு ரூ.70 ஐ எட்டும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போது டாலர் மதிப்பு இந்திய ரூபாயுடன் ஒப்பிடுகையில் அதிகரித்து வருகிறது.   கடந்த 20 மாதங்களாக இவ்வாறு உயர்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.    அது மட்டும் இன்றி ரூபாய் – டாலர் மதிப்பில் கச்சா எண்ணெய் விலை மற்றும் விளை பொருட்கள் ஆதார விலைகளும் தாக்கத்தை உண்டாக்குகின்றன.  இது குறித்து ஒரு நிதி நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

அந்த ஆய்வறிக்கையில், ”கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இந்நிலையில் செலவினங்களை கட்டுப்படுத்துவதும் வருமானத்தை அதிகரிப்பதும் அரசு செய்ய வேண்டிய உடனடி நடவடிக்கை ஆகும்.   ஆனால் இந்திய அரசு தற்போது விளை பொருட்களின் ஆதார விலையை உயர்த்தி உள்ளது.   இதனால் உணவுப் பொருட்களுக்காக அரசு செய்யும் செலவு அதிகரிக்கும்.

நடப்பு நிதி ஆண்டில் அரசு உணவுப் பொருட்கள் மானியமாக ரூ. 1.75 கோடி ஒதுக்கிடு செய்திருந்தது.   தற்போது இந்த ஆதார விலை உயர்வால் அது ரூ.2 லட்சம் கோடியாக உயர வாய்ப்புள்ளது.    அத்துடன் கச்சா எண்ணெயின் விலை ஏற்றமும் அனைத்துப் பொருட்களின் விலைகளில் தாக்கத்தை உண்டாக்கும்.

இதனால் நாட்டில் பண வீக்கம் அதிகமாகும்.   இந்த பண வீக்கம் சுமார் 0.25% லிருந்து 0.3% வரை குறைந்த பட்சம் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.   இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மேலும் சரிவு உண்டாகும்.   அதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 70 ஐ விரைவில் எட்ட வாய்ப்பு உள்ளது. ” என தெரிவித்துள்ளது.