இலங்கை குழப்பம்: வியாழேந்திரன் செய்தது கேவலமான செயல்! இரா.சம்பந்தன்

கொழும்பு:

மிழ் கூட்டமைப்பின் தீர்மானத்தை மீறி ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிப்பதாக மட்டக்களப்பு தொகுதி எம்.பி. வியாழேந்திரன் தெரிவித்திருப்பது, கேவலமான செயல் என்று தமிழ் கூட்டமைப்பு தலைவர்  இரா.சம்பந்தன் கடுமையாக சாடி உள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டு குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் முடிவு செய்திருந்த நிலையில், மட்டக்களப்பு எம்.பி.யான வியாழேந்திரன், ராஜபக்சே அணியின் ஆசைக்கு மயங்கி, அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.

அதையடுத்து, அவருக்கு உடடினயாக அமைச்சர் பதவி வழங்கினார ராஜபக்சே. இது நாட்டில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில தமிழ் எம்.பி.க்களை இழுக்க ராஜபக்சே அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 15 எம்.பிக்களே யார் பிரதமர் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள நிலையில், அவர்களை விலைபேசி வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்பிகள் உள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்த பட்சம் 113 எம்பிகளின் ஆதரவு தேவை. ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கே வுக்கு ராஜபக்சேவை விட அதிக அளவு எம்.பி.க்கள் ஆதரவு உள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 எம்பிக்களும் ரணிக்கு வாக்களிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்து.

இந்த நிலையில், ராஜபக்சே வெற்றிபெற அங்கு குதிரை பேரம் நடைபெற்று வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களை மந்திரி பதவி ஆசை காட்டி விலைபேசி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் கூட்டமைப்பி எம்.பி.வியாழேந்திரன் ராஜபக்சேவின் ஆசைக்கு விலை போயுள்ளார்.

இது இலங்கை தமிழர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர் களிடம் பேசிய  தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நாடாளுமன்றத்தை முடக்கியதன் மூலம் ராஜபக்சே ஆதரவை திரட்ட அதிபர் சிறிசேனா உதவி புரிந்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், வியாழேந்திரன் , ராஜபக்சே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றவர்,  நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் மாறுவது உண்மை. இந்நிலையில், கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் இடம் மாறி யிருக்கிறார். அவர் அப்படிச் செய்வாரென நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அது மிகவும் கேவலமான செயல். ஆனால், அவரைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தன.அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுப்போம்” என கூறியுள்ளார்.

இந்த நிலையில, புதிய பிரதமர் ராஜபக்சேவிற்கு ஆதரவளிக்க முடியாது என்று தமிழீழ மக்கள் விடுதலை கழக தலைவர் சித்தார்த்தனும் அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.