மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடக்கம்… மத்தியஅரசு பச்சைக்கொடி

--
டெல்லி:
ரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்க மத்தியஅரசு பச்சைக்கொடி காட்டி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடுமையான இழப்பை சந்தித்து வரும் தனியார் விமான நிறுவனங்கள் விரைவில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், மே மாதம் 25ந்தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

நாடு முழுவதும் வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும். இதனால் அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு  தெரிவித்துள்ளார்.

மேலும், பயணிகள் செயல்பாட்டு முறை  விமானப்போக்குவரத்து துறை நெறிமுறைகளை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விமான பயணத்தின்போது  பயணிக்கும் பயணிகளுக்கு தெர்மல்சோதனை,  மாஸ்க் அணிவது,  உரிய பாதுகாப்பு மற்றும் தனிமனித இடைவெளி போன்றவைகள் பின்பற்ற அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.