கர்நாடகாவில் 1000ஐ தாண்டிய சமையல் எரிவாயு விலை: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

பெங்களூரு:

டந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து வரும் நிலையில் சமையல் எரி வாயு விலை உயர்ந்துள்ளது.  இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில்  14.2 கி.கி அளவுள்ள சமையல் எரி வாயு விலை ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது. இது குடும்ப தலைவிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. அதைத்தொடர்ந்தே சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் மானியம் இல்லாத சமையல் கேஸ் விலை  ரூ.59ம், . மானியம் உள்ள சிலிண்டர் 2 ரூபாய் 89 காசு உயர்த்தப்பட்டு இருந்தது. சென்னையில் மானியமில்லாத ஒரு சிலிண்டரின் விலைரூ.888.50 ஆகவும் உயர்ந்தது. கர்நாடகாவில் 941 ஆக இருந்த விலை தற்போது ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை வீழ்ச்சி காரணமாக,கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்தது வருகிறது. ஆனால் சமையல் எரிவாயு விலையை அதிகரித்து உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயுவின் (14.2 கி.கி) விலை ஆயிரத்தை தாண்டி உள்ளது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில்  14.2 கி.கி சிலிண்டர் விலை ரூ.1,015.5 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இது மாநில மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சிலிண்டர் விலை உயர்வுக்கு குடும்பத்தலைவிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.