லாக்டவுனுக்கு பின்னர் உள்நாட்டு விமான பயணத்தில் புதிய உச்சம்: நேற்று மட்டும் 3,13,668 பேர் பயணம்

டெல்லி: கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் நேற்று ஒரே நாளில் உள்நாட்டு விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 3,13,668 பேர் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் விமானம் இயக்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 11 மாதங்களாக குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், பிப்.28ம் தேதி 2,353 உள்நாட்டு விமான சேவைகளில் 3,13,668 பேர் பயணம் செய்துள்ளனர். லாக்டவுனுக்கு பிறகு, கடந்தாண்டு மே 25ம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியதில் இருந்து அதிகமான பயணிகள் நேற்று ஒரே நாளில் பயணம் செய்துள்ளனர் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி தெரிவித்துள்ளார்.