Random image

விம்பிள்டன் டென்னிஸ்….நோவக் ஜோகோவிச் சாம்பியன்

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடந்து வந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 21வது இடத்தில் உள்ள செர்பியா வீரர் ஜோகோவிச், 8வது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை ஆகியோர் மோதினர். ஆரம்பம் முதலே ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தினார்.

இவர் முதல் 2 செட்களையும் 6-2, 6-2 என எளிதாக கைப்பற்றினார். 3வது செட்டில் போராடிய இவர் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜோகோவிச் 6-2, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.