அமெரிக்காவின் பிரபலமான அதிபர் பட்டியலில் டிரம்புக்கு 10வது இடம்தான்…

வாஷிங்டன்:

லக நாடுகள் மத்தியில் அவ்வப்போது, பரபரப்பை ஏற்படுத்தி வரும்  தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, அந்நாட்டின் அதிபர் பட்டியலில் 10வது இடமே கிடைத்துள்ளது…. இது அவரது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் 45-வது அதிபராக டெனால்டு டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்றார்.  அவர் பதவி ஏற்றது முதல் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து, உலக நாடுகளிடையே பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.

வடகொரியா, சீனா போன்ற நாடுகளின்மீது பொருளாதார தடைகளை விதித்தும், ஈரான் மீது தாக்குதல் நடத்தியும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள டிரம்ப் மீது, துருக்கி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி,அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றிலேயே  முதன்முறையாக  பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்க தீர்மானத்தையும் எதிர்கொண்ட டிரம்ப் மீண்டும்  தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், இதுவரை அதிபராக பதவி ஏற்றுள்ள 12 அதிபர்களின் நிர்வாக திறமை குறித்து பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், முதலிடத்தில் ரொனால்டு ரீகன் இடம்பெற்றுள்ள நிரையில், டொனால்டு டிரம்புக்கு 8வது இடம் கிடைத்து உள்ளது. இந்த தகவலை அமெரிக்க பத்திரிகையான US News தெரிவித்து உள்ளது.

அமெரிக்க அதிபர்கள் பட்டியல்:

 1. ஜான் எஃப் கென்னடி (John F. Kennedy)
 2. ரோனால்டு ரீகம் (Ronald Reagan)
 3. பராக் ஓமாபா (Barack Obama)
 4. பில் கிளின்டன் (Bill Clinton)
 5. ஜியார்ஜ் டபிள்யு புஷ் (George H.W. Bush)
 6. ஜியார்ஜ் டபிள்யு புஷ் (George H.W. Bush) (
 7. டிவைட் டி ஈஸ்னோவர் (Dwight D. Eisenhower) (tie)
 8. ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter)
 9. ஜெரால்டு போர்டு (Gerald Ford)
 10. டொனால்டு டிரம்ப் (Donald Trump)
 11. லின்டன் ஜான்சன் (Lyndon Johnson)
 12. ரிச்சர்டு நிக்ஷன் (Richard Nixon)