இந்தியா வந்ததன் நோக்கம் ரூ. 21,500 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் விற்பதற்கு ?

அகமதாபாத் :

 

பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு மேலும் தொடரும். உலகில் அதிநவீன ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்துவரும் அமெரிக்கா, அதனை இந்தியாவிற்கு வழங்க காத்திருக்கிறது.

நாளை இருநாட்டு பிரதிநிதிகள் ரூ. 21,500 கோடி அளவிலான ராணுவ தளவாடங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், முன்னதாக அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் வறுமையே இருக்காது என்று பேசினார்.

லட்சக்கணக்கான மக்கள் ஸ்டேடியத்தில் கூடியிருக்க, பலலட்சம் மக்கள் விமான நிலையம் முதல் சபர்மதி ஆசிரமம் வரையிலும், சபர்மதி ஆசிரமம் முதல் ஸ்டேடியம் வரையிலும், பின் ஸ்டேடியம் முதல் விமான நிலையம் வரையிலும் குவிந்து, தங்களின் அனைத்து வேலையையும் இன்று ஒரு நாள் மறந்துவிட்டு, தங்களின் வாழ்வாதாரம் உயர்த்த வரும் அமெரிக்க அதிபரை “நமஸ்தே டிரம்ப்” என்று வரவேற்க காத்திருந்த மக்களுக்கு, அதிபர் டிரம்ப் தந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

அஹிம்சயை போற்றிய காந்தியின் ஆசிரமம் வந்த பின் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததன் நோக்கத்தை வெளியிட்டு இருக்கிறார்.