தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து

நியூயார்க்,

சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 312 தொகுதிகளைக் கைப்பற்றி  அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

நான்கு மாநிலங்களிலும் பாஜக  வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிரதமர் மோடிக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் சீன் ஸ்பைசர் கூறும்போது, உத்தரப் பிரதேசத்தில் இந்திய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றதற்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்ததாகவும், ட்ரம்ப் – மோடி இடையிலான உரையாடல் பின்னால் விவரமாக வெளியிடப்படும் என்று கூறினார்.

ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு மோடியுடன் தொலைபேசி வாயிலாக நடத்தும் மூன்றாவது உரையாடல் இதுவாகும்.