அமெரிக்க தேசியக் கொடிக்கு தவறாக வண்ணம் தீட்டிய டிரம்ப் – நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

அமெரிக்கா தேசியக் கொடிக்கு தவறாக வண்ணமிட்டதன் காரணமாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளார். குழந்தைகளுடன் சேர்ந்து ஓவியம் வரைந்த டிரம்ப் அமெரிக்கக் கொடிக்கு தவறான நிறத்தில் வண்ணமிட்டது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

trump

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் சென்றிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு டிரம்ப் தனது மனைவி மொலானிய டிரம்புடன் சென்றார். மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து டிரம்ப் ஓவியம் வரைந்தார்.

அவர் வரைந்த தேசியக் கொடிக்கு தவறான நிறத்தில் வண்ணம் தீட்டியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகவே பலரது விமர்சனத்துக்கு டிரம்ப் ஆளாகியுள்ளார். அமெரிக்கா தேசியக்கொடி சிவப்பு-வெள்ளை நிறக்கோடுகளுடன் இருக்கும். ஆனால் டிரம்ப், நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் தேசியக் கொடிக்கு வண்ணமிட்டார். இதனைத் தொடர்ந்து ”அமெரிக்க தேசியக் கொடி எப்படி இருக்கும் என்று கூட டிரம்புக்கு “ தெரியவில்லை என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

டிரம்ப் வரைந்ததாக கூறப்படும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.