வாஷிங்டன்:

அமெரிக்க செனட் (நாடாளுமன்றம்) கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அதிபர் டொனால் ட்ரம்புக்கு, செனட் சபாநாயகர் நான்ஸி பெலோஸி அனுமதி மறுத்துவிட்டார்.


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் செனட்டின் இரு அவைகளிலும் அமெரிக்க அதிபர் உரையாற்றுவது வழக்கம்.

இந்நிலையில், அமெரிக்காவில் போக்குவரத்து பாதுகாப்புப் படையினரின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வரையில், செனட் அவையின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ட்ரம்பை உரையாற்றவோ அல்லது தன் உரையை எழுத்துப் பூர்வமாக வெளியிடவோ அனுமதிக்க மாட்டேன் என சபாநாயகர் நான்ஸி பெலோசி திட்டவட்டமாக அறிவித்தார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே கடிதம் மூலம் மோதல் நடந்தது.

இதனையடுத்து, ஜனவரி 29-ம் தேதி செனட் கூட்டு கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் உரையாற்ற அனுமதிக்கும் ஒருமித்த தீர்மானத்தை அறிமுகப்படுத்த மாட்டேன் என்று அறிவித்தார்.

மேலும் அதிபர் ட்ரம்பின் கடிதம், தனக்கு மிரட்டல் விடுப்பதுபோல் உள்ளது என்றும் சபாநாயகர் நான்ஸி பெலோஸி குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே, போக்குவரத்து பாதுகாப்பு ஊழியர்கள் போராட்டத்தை திரும்பப் பெறும் வரை, செனட்டின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றப் போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதனை வரவேற்றுள்ள சபாநாயகர் நான்ஸி பெலோஸி, ஊதியம் இன்றி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 8 லட்சம் போக்குவரத்து பாதுகாப்பு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால், அதிபர் செனட் அவையில் பேசலாம் என்றார்.

இந்நிலையில், சபாநாயகர் மீது கோபமடைந்த அதிபர் ட்ரம்ப், அவருக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ விமானத்தை திரும்பப் பெற்றுள்ளார்.