வாஷிங்டன்:
ந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும்  வீ சாட் மற்றும் டிக் டாக் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க வணிகத் துறை நேற்று சீனாவிற்கு சொந்தமான வீ சாட் மற்றும் டிக் டாக் செயலிகளை செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவில்லை என்றால் டிக் டாக்கிற்க்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை தொடர்ந்து பல அமெரிக்க நிறுவனங்கள் பைட் டேன்ஸ் நிறுவனத்திடமிருந்து டிக் டாக் செயலியை வாங்குவதற்கு போட்டியிட்டனர். இறுதியில் ஆரக்கிள் என்ற நிறுவனம் டிக் டாக் செயலியுடன் கை கோர்த்தது. ஆனால் அதன்பிறகு ஆரக்கிள் நிறுவனத்தின் பங்குகள் 1.6% வரை சரிந்தன.
ஆரக்கிள் மற்றும் பைட்  டேன்ஸ் நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி டிக் டாக் செயலியின் பெரும்பாலான பங்கு பைட் டேன்ஸ் நிறுவனத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது, ஆரக்கிள் நிறுவனத்திடம் குறைந்தபட்ச பங்கு மட்டுமே உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் இந்த ஒப்பந்தத்தை ஏற்காத அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் வீ சாட் மற்றும் டிக் டாக் ஆகிய செய்லிகளை அமெரிக்க மக்கள் பதிவிறக்கம் செய்ய முடியாது என்று அறிவித்துள்ளார்.
மேலும் இந்த இரு செயலிகளும் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.