வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் டிரம்ப் உள்பட பலரும் முகக்கவசம் இல்லாமல் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வியாட்நாம் மற்றும் கொரிய போரில் மரணம் அடைந்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது.
அதனை முன்னிட்டு அதிபர் டிரம்ப், ஆர்லிங்டன் நேஷனல் சிமிட்ரியிலும், பால்டிமோர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு உரையாற்றினார். போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுடன் கொரோனாவால் மரணம் அடைந்த வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.
கூட்டத்தில் கொரோனா பாதிப்பையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஒன்று திரண்டனர். அவர்களில் பலர் மாஸ்க் அணியவில்லை. இது விவாதத்துக்குள்ளாகி உள்ளது. டிரம்ப் அரசு கொரோனா காலத்தில் கூட, எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் மெத்தனமாக உள்ளதாக ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.