ஆரம்பமே அதகளம்: காந்தி ஆசிரமத்தில் காந்தியை மறந்த டிரம்ப்

அகமதாபாத்:

ந்தியா வருகை தந்துள்ள அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் , குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தின் விருந்தினர் வருகை பதிவேட்டில் குறிப்பு எழுதும் போது  மகாத்மா காந்தியை மறந்து மோடியை பற்றி எழுதி ஆரம்பத்தையே அதகளமாக்கியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், 2 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகை தந்தார். அதிபர் டிரம்ப்புடன் அவரது குடுபத்தினர் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் இந்தியா வருகை தந்துள்ளனர்.

டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. விமான நிலையத்தில் டிரம்ப்பை வரவேற்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குஜராத் பாரம்பரிய முறைப்படி சங்கொலி முழங்கப்பட்டது. சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு நூலால் ஆன மாலையை டிரம்ப் அணிவித்தார்.

பின்னர் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களையும் டிரம்ப் பார்வையிட்டார். காந்தியடிகளின் கைராட்டையை ஆர்வமுடன் பார்த்த டிரம்புக்கு அதை எப்படி இயக்குவது என ஆசிரம நிர்வாகிகள் விளக்கினர். அங்கு இருந்த தீயவற்றை பார்க்காதே; தீயவற்றை பேசாதே; தீயவற்றை கேட்காதே என்ற தத்துவத்தை விளக்கும் குரங்கு பொம்மை குறித்தும் டிரம்ப்புக்கு மோடி விளக்கினார்.

பின்னர் சபர்மதி ஆசிரமத்தின் விருந்தினர் வருகை பதிவேட்டில் டிரம்ப், அவரது மனைவி மெலானி கையெழுத்திட்டனர். பின்னர் அந்த பதிவேட்டில் குறிப்பு எழுதிய டிரம்ப், காந்தியை பற்றி எழுதாமல்,  பிரதமர் மோடி சிறந்த நண்பர் என்றும், இந்தியா பயணத்திற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டார். காந்தியை மறந்து விட்ட டிரம்பின் குறிப்பு குறித்து டிவிட்டரில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி