வாடிகன்,

மெரிக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் தனது முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸை சந்தித்து பேசினார்.

அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபிறகு பல அதிரடி நடவடிக்களை எடுத்து வரும் டிரம்ப் உலக நாடுகளின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இத்தாலிக்கு வந்தார். அங்கு அதிபர்  செர்ஜியோ மேட்டரல்லா, பிரதமர் பயோலோ ஜென்டிலோனி ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறார்.

இதற்கிடையில்,  டிரம்ப் தனது மனைவி  மெலானியா மற்றும் மகள் உடன் கத்தோலிக்க மத தலைமையமான வாடிகன் சென்று, கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸை சந்தித்து பேசினார்.

டிரம்பை போப் பிரான்சிஸ் கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் இருவரும் பொதுவான பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். சுமார் இருபது நிமிடம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது போப் பிரான்சிஸ், டிரம்புக்கு மார்டின் லூதர் கிங் எழுதிய ‘போற்றத்தக்க’ புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேல்தல் பிரசாரத்தின்போது, தான் ஆட்சிக்கு வந்தால் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்படும் என டிரம்ப் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு போப்  பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.