இந்தியா வரும் டிரம்ப் சிஏஏ, என்ஆர்சி குறித்து விவாதிப்பார்! அமெரிக்க அதிகாரிகள் தகவல்

வாஷிங்டன்:

2நாள் பயணமாக இந்தியா வரும் டிரம்ப், நாட்டில் நிலவி வரும் மதரீதியிலான பிரச்சினை குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது… இதை வெள்ளைமாளிகை மூத்த அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார்.

2நாள் பயணமாக வரும் 24ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலினாவுடன் இந்தியா வருகை தருகிறார். அப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத், தாஜ்மகால்  மற்றும் டெல்லியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். டிரம்ப் வருகையை வரவேற்க அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள சிஏஏ, என்ஆர்சி போன்ற சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் மதச்சுதந்திரம் குறித்து விவாதிப்பது குறித்து வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துஉள்ளர்.

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரியிம் செய்தியாளர்கள், இந்தியா செல்லும் டிரம்ப், அங்குள்ள  குடியுரிமை பிரச்சினையில், குறிப்பாக சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி குறித்து பிரதமர் மோடியுடன் பேச டிரம்ப் திட்டமிட்டுள்ளாரா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அந்த அதிகாரி “அது நிச்சயம்” என்று தெரிவித்து உள்ளார்… அத்துடன்,  ஜனநாயகம் மற்றும் மத சுதந்திரம் பற்றிய டிரம்ப் பொதுவெளியில் பேசமாட்டார் என்றும், ஆனால், தனிப்பட்ட முறையில் நிச்சயம் பேசுவார்…  இந்த பிரச்சினைகளை எழுப்புவார், இது  டிரம்ப் நிர்வாகத்திற்கு மிக முக்கியமான மத சுதந்திர பிரச்சினை என்றும் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பேசியவர், . “இந்தியாவின் ஜனநாயக மரபுகள் மற்றும் நிறுவனங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு, அந்த மரபுகளை நிலைநிறுத்த இந்தியாவை நாங்கள் தொடர்ந்து ஊக்குவிப்போம். மேலும் நீங்கள் எழுப்பிய சில பிரச்சினைகள் குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்” என்றும் அந்த  வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

வலுவான ஜனநாயக அடித்தளத்தைக் கொண்டுள்ள இந்தியாவில்,  மத சுதந்திரத்தின் அம்சம் இந்திய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது “அமெரிக்க ஜனாதிபதிக்கு முக்கியமான ஒன்று” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிகாரியின் இந்த தகவல் காரணமாக, நாட்டில் நிலவி வரும் தற்போதைய நிலைமை மற்றும் மத சுதந்திரம் குறித்து பிரதமர் மோடியிடம் டிரம்ப் நிச்சயமாக பேசுவார் என்று தெரிகிறது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா விஜயம் செய்யும் டிரம்ப் அதுகுறித்து மோடியிம் பேசுவார் என அமெரிக்க அதிகாரிகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக பலமுறை கூறியும், இந்தியா, அதற்கு மறுப்பு தெரிவித்து வந்திருப்பதுடன், இது எங்கள் நாட்டு பிரச்சினை, இதில் 3வது நபர் தலையிட ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், தற்போது டிரம்ப் மத சுதந்திரம் குறித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது…

இதற்கு இந்தியா தரப்பில் என்ன பதில் தெரிவிக்கப்படும் என்பது இதுவரை வெளியாகவில்லை…