புதிய அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவில் சரியான உரிமமின்றி தங்கியிருக்கும் 30 லட்சம் வெளிநாட்டினரை கூண்டோடு நாடு கடத்துவேன் என்று தனது வழக்கமான பாணியில் பேட்டி கொடுத்து எல்லோரையும் அதிர வைத்துள்ளார்.

trump

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த ட்ரம்ப், கிரிமினல் பிண்ணனி உள்ளவர்கள், கேங்க்ஸ்டர்கள், போதை மருந்து டீலர்கள் என்று ஒரு இரண்டு மில்லியன் அல்லது மூன்று மில்லியன் பேர் அமெரிக்காவில் சரியான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக குடியிருக்கிறார்கள். இவர்களை கூண்டோடு நாடுகடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் பால் ரையான், இதுபோன்ற திட்டங்கள் எதுவும் தற்போதய ஜனநாயக கட்சி அரசுக்கு இல்லை. ட்ரம்ப் இதுபோன்ற விபரீத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைபவர்களை தடுக்க அமெரிக்காவுக்கும், மெக்ஸிகோவுக்கும் இடையே பெரிய தடுப்பு சுவர் எழுப்பப்போவதாக தாம் தேர்தலில் குறிப்பிட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.