வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் தென்கொரியா அதிபர் பார்க் மூன் ஜே ஆகியோர் சந்தித்து பேசினர். இதில் பல சுமூக தீர்வு ஏற்பட்டது. அணு ஆயுதங்களை கைவிட தயாராக இருப்பதாக கிம் ஜோங் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து வட கொரிய அதிபர் கிம் ஜங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருடனான சந்திப்பு ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘‘உலக அமைதிக்கான ஆக்கப்பூர்வ சந்திப்பாக இது இருக்கும்’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.