ஜாமீன் கோருபவர்களுக்கு நிபந்தனையாக மரம் வெட்டவும்  நீர் ஊற்றவும் சொல்வது தவறான செயல் என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரினால், நிபந்தனையாக மரம் வெட்டவும்  நீர் ஊற்றவும் சொல்வது சமீபகலமாக தமிழக நீதிமன்றங்களில் வாடிக்கையாக உள்ளது.

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் , “ குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரும்போது, நிபந்தனையாக மரம் வெட்டச் சொல்வதும், நீர் ஊற்றச் சொல்வதும்  மனிதாபிமானம் அற்ற செயல்.  கீழமை நீதிமன்றங்கள் இதுபோன்ற மன உளைச்சல் தரும் தண்டனைகளை குற்றம் சாட்டப்படோருக்கு அளிக்கூடாது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.