’பேட்ட’ படத்தில் நடிக்காதே.. மாளவிகாவுக்கு அட்வைஸ்..

கார்த்திக் சுப்பராஜ் இயக்க ரஜினிகாந்த் நடித்த படம் ’பேட்ட. இதில் நடிக்க வேண்டாம் என்று மாளவிகாவிடம் கூறினார்களாம் இதுபற்றி அவர் அளித்த பேட்டியில்,’பேட்ட படத்தில் பூங்கொடி என்ற பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அது சிறிய வேடம் அதில் நடிக்க வேண்டாம் என்று மாளவிகாவுக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் கூறினார்களாம்.

ஆனாலும் பாத்திரம் சிறியதாக இருந் தாலும் பிடித்திருந்ததுடன் இதைவிட்டால் ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ய்பு மீண்டும் கிடைப்பது அரிது என நடிக்க ஒப்புக் கொண்டாராம் மாளவிகா.

இந்த தகவலை சமீபத்தில் அவரே ஒரு பேட்டி தெரிவித்திருக்கிறார். மேலும்.’ பேட்ட படத்தில் நடித்தது தன்னை அனைவரிடமும் கொண்டு சென்று சேர்த்திருக்கிறது. அந்த வாய்ப்பு மாஸ்டர் பட வாய்ப்பு வரவும் காரணமாக இருந்தது’ என்று மகிழ்கிறார் மாளவிகா மோகனன்.