டெல்லி:
ழைகளுக்கு வங்கி கணக்கில் பணம் போடுங்கள்,  இந்த விஷயத்தில் பண்ககாரர்கள் போல் செயல்பட வேண்டாம், அது பேரழிவை ஏற்படுத்தும் என்று மோடி அரசுக்கு  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான  ராகுல்காந்தி எச்சரிக்கை செய்துள்ளார்.
 கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் ஒருபுறம் பேரழைவை சந்தித்துள்ள நிலையில், அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்ற னர்.
இதுதொடர்பாக ஏற்கனவே முன்னாள் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ராகுராம் ராஜனுடன் ஆலோசனை நடத்திய ராகுல்காந்தி, முழு ஊரடங்கை அறிவித்தால், அது பொருளாதார நடவடிக்கைகளில் பேரழிவைத்தான் உருவாக்கும்,  அனைத்து வகை உதவித் தொகை பெறுவோர், வேலையில்லாதோர், வாழ வழியில்லாதோருக்கு அடுத்த 4 மாதங்களுக்கு நாம் நிதியுதவி செய்து ஆதரவளிக்க வேண்டும். பண உதவியோடு பொது விநியோகத்திட்டத்தின் மூலம் உணவும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், முதலாளி மனப்பான்மையில் மோடிஅரசு ஆன்-ஆஃப் சுவிட்  போல நடந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுதியதுடன்,  கொரோனாவின் தாக்கம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி இருப்பதாகவும் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளில் உடனடியாக பணத்தை செலுத்தாவிட்டால், அது ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி முன்மொழிந்த  குறைந்த பட்ச வருமான திட்டமான ஆண்டுக்கு 72,000 ரூபாய்  வருமான உதவி சமூகத்தின் ஏழ்மையான மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற திட்டம் போல, ஒரு திட்டத்தை உடனே மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு சாப்பிட உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதையும் செய்ய துணிவாள், அதுபோல எண்ணி அரசும்,  ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் வேண்டும்.
மத்தியஅரசு இதை  செய்யாவிட்டால், இந்த பிரச்சினை ஒரு பேரழிவாக மாறும் வாய்ப்பு உள்ளது…
மக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் கடன் என்பது நிவாரணம் அல்ல , பணத்தை நேரடியாக கொடுப்பது தற்போதைய தீர்வு ஆகும். நாட்டு மக்களுக்கு தற்போது பணம் தான் தேவை என்பதால் நேரடியாக அவர்களுக்கு பணம் கிடைக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி திட்டத்தை பிரதமர் மோடி மாற்ற வேண்டும்.
ஏழைகள், விவசாயிகள் தான் நாட்டின் எதிர்காலம் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். பிரதமர் மோடிஜி, தற்போது அறிவித்து வரும்  பொருளாதார தொகுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.